அரிய புகைப் படங்கள்

மஆரிப் அணைக்கட்டு
ஏமன் நாட்டை சேர்ந்த மஆரிப் என்ற ஊருக்கு அருகில் சபவு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ராணியான துப்பவு பரம்பரையில் வந்த பல்கீஸ் ராணியின் தலைமையில் சூரியனை வணங்கி வந்தனர்.
Houses of Sabau People
சபவு கூட்டத்தார் வாழ்ந்த வீடுகள்
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன் “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.

அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா? அல்குர்ஆன் 34:15-17

Maarib Dam
உடைந்து போன அணைகட்டின் சிதிலங்கள்
உடைந்து போன பழைய அணைக்கட்டிற்க்கு சிறிது உயரத்தில் ஐக்கிய அரபு நாடுகளின் தலைவரால் கட்டப்பட்ட அணை இப்பொழுது தண்ணீரை தேக்கி வைக்கப் பயன்படுகிறது. 
குகைவாசிகள்
அல்லாஹ் தன் திருமறையில் பின்வாறு விவரிக்கிறான்.

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.

ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.

(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம். அல்குர்ஆன் 18:9-22
Bones of Cave people Bones of Cave people
அவர்களது எலும்புகள்

குகை
Jaw bones of Cave people's dog
அந்த நாயின் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு
அவர்களது சடலங்கள் குகைக்குள் வெவ்வேறு கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஓரே கல்லறைக்குள் மாற்றப்பட்டன. இப்பொழுதும் அவர்களது எலும்புகளை கல்லறைக்குள் காணலாம்.

இக்குகை ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் இருக்கிறது. 
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
அரேபியாவில் உள்ள மக்காவில் கி.பி. 571 ல் ஆமினா, அப்துல்லாஹ் அவர்களுக்கும் மகனாய் பிறந்து, பெற்றோரை இழந்து பாட்டனார் அப்துல் முத்தலிபு ஆதரவில் வளர்ந்து தீய செயல்கள் அனைத்திலிருந்தும் சிறு வயதிலேயே விலகியும் அல்அமீன் என்ற சிறப்பு பெயர் பெற்றவர்தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள்.

அவர் நாற்பது வயதை அடைந்ததும் மக்காவிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜபலுன்நூர் என்ற இந்த மலையின் உச்சியிலுள்ள ஹிரா குகைக்கு சென்று தனிமையில் இருப்பது வழக்கம். சிலை வணக்கம், விபச்சாரம், மது அருந்துதல், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், கோத்திரங்களுக்கிடையே இருந்த பகைமை போன்ற தமது மக்களின் தீயச் செயல்கள் நிறைந்த வாழ்க்கை முறைகள் அவரை பெரிதும் கவலைப்படச்செய்தன. ஹிரா குகையில் பல நாட்கள் தொடர்ந்து தியானம் செய்வது அவரது வழக்கம். ஒரு நாள் அவர் ஹிரா குகையில் இருந்த போது அல்லாஹ்வின் கட்டளைப்படி வானத்திலிருந்து இந்த மலைக்கு இறங்கி வந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்ற வானவர் அவரிடம் ஓதுவீராக என்றார். அதனைக்கேட்டு பயந்து நடுங்கி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் எனக்கு ஓத தெரியாது என்று கூறினார். வானவர் அவரை இறுக அணைத்து மீண்டும் ஓதுவீராக என்றார். அதற்க்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நான் அறியேன் என்றார். மூன்றாவது முறையும் இவ்வாறே நடந்தது. பிறகு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை வானவர் ஓதிக் காட்டினார்.
Hira Cave
ஹிரா குகை
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அல்குர்அன் 96:1-5


இதற்க்கு பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்றுவிட்டார். இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

மக்காவில் வாழ்ந்த 13-வருடங்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கு கடுமையான துன்பங்கள் ஏற்ப்பட்டன. மக்காவில் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது. மக்காவிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மதினாவிற்க்கு ஹிஜ்ரத் செய்யும்படி நபிகள் தமது தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். ஜம்பத்து மூன்றாவது வயதில் மக்காவில் உள்ள தன் வீட்டிலிருந்து எதிரிகளுக்கு தெரியாமல் வெளியேறினார். அவரது உற்ற தோழரான அபுபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஜபலுஸவ்ரின் என்ற இந்த மலை உச்சிக்கு சென்றார். எதிரிகளின் கண்களில் படாமலிருக்க இந்த குகையில் மூன்று நாட்கள் மறைந்திருந்தனர். குகை வாயில் வரை வந்த எதிரிகளை கண்டு பயந்த அபுபக்கரின் காதில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கவலைப்படவேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்று கூறினார்கள்.
Jablusawr Cave
ஜபலுஸவ்ரின் குகை
எதிரிகள் சென்றவுடன் இருவரும் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் ஒட்டகத்தில் மதினாவிற்க்கு சென்றார்கள். மதினாவிற்க்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குபாவிற்க்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் வந்த ஒட்டகம் அங்கே மண்டியிட்டது.

ஜபலுஸவ்ரின் குகை உட்புறம்
அந்த இடத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நான்கு நாள்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தலைமையில் குபா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இந்த குபா பள்ளியை பிற்காலத்தில் சவுதி அரசாங்கம் புதிப்பித்தது.
Kuba Mosque
குபா பள்ளிவாசல்
அதன்பின் மதினாவுக்கு செல்லும் வழியில் வாதிசாலிமில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முதலாவதாக ஜுமா தொழுகை நடத்தியது இந்த பள்ளியில்தான். இதற்க்கு மஜிதில் ஜுமா என்று பெயர். இந்த பள்ளியை பிற்காலத்தில் சவுதி அரசாங்கம் புதிப்பித்தது.
Juma Mosque
ஜுமா பள்ளிவாசல்
மதினாவிற்க்கு வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முதலில் செய்த பணி முஸ்லிம்களின் கலாச்சார மையமாக ஒரு பள்ளியை கட்டியதுதான். அன்று கட்டப்பட்ட அந்த சிறிய பள்ளி பிறகு புதுபித்துக் கட்டப்பட்டது. இப்பொழுது இந்த மஜிதில் நபவி லட்சக்கணக்கானோர் தொழுகை நடத்தக் கூடிய விசாலமான இடமாக உள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் குர்ஆன் வகுப்புகளும், நீதி மன்றமும், அலுலகமும், பாரளுமன்றமும் இந்த பள்ளியில்தான் செயல்படுத்தப் பட்டது.

பத்ரு
நிராகரிப்போரின் தொல்லைகளை தாங்க முடியாமல் மக்காவிலிருந்து மதினாவிற்க்கு சென்ற முஸ்லீம்களை மதினாவிலும் நிம்மதியாக வாழ மக்காவாசிகள் விடவில்லை. மக்காவிலிருந்து வந்த ஆயுதம் தாங்கிய ஆயிரம் குரைசிப் படையினர் மதினாவிற்க்கு 80 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள இந்த பத்ரு என்ற இடத்திற்க்கு வந்த பொழுது முஸ்லீம்கள் தங்களை தற்காத்து கொள்ளும் சூழ்நிலை ஏற்ப்பட்டது. ஆயுதங்கள் குறைவாக உள்ள 313 ஸஹாபாக்களை மட்டும் கொண்ட முஸ்லீம் படை ஒரே இறைவனிடமும் அவனுடைய தூதரிடமும் அசையா நம்பிக்கை வைத்து நிலை குலையாமல் நின்று அவர்களை எதிர்த்து போர் செய்த பத்ரு களம் இதுதான்.
Badr battle field
இரத்தம் சிந்தி வீரத்தியாகிகள் 13 பேர்களின் அடக்கஸ்தலங்கள் இங்குதான் உள்ளன. அடக்கஸ்தலங்களை கட்டி எழுப்புவதும் அடக்கம் செய்தவர்களை அழைத்து பிரார்த்திப்பதும் இஸ்லாத்தில் மிகக் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

காபிர்களான குரைசிப் படையினர் முகாமிட்ட இடம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரியான அபூஜஹல், முஆத் மற்றும் முஅவ்வித் இரண்டு அன்சாரி வாலிபர்களால் கொல்லப்பட்ட இடம்.
The place where two youngsters killed Abujahil
அபூஜஹல் கொல்லப்பட்ட இடம்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி வானிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான வானவர்கள் முஸ்லீம் படையினருடன் இணைந்து போரிட்டனர். இறைவன் உதவியினால் பத்ரில் முஸ்லீம்கள் வெற்றி பெற்றார்கள். மஜ்ஸித் ஹாரிஸ் என்ற இந்த பள்ளி உள்ள இடத்தில் தான் அன்று பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முகாமிட்டு தங்கியிருந்தார்கள்.
Harris Mosque
மஸ்ஜித் ஹாரிஸ்
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. அல்குர்ஆன் 3:13

உஹது
மக்கா குரைசிகளும் பிற கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் மூவாயிரம் படையினர் மதினாவை தாக்குவதற்க்கு உஹது என்ற இடத்திற்க்கு வந்தனர். அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு தலைமையில் 50 வில்போர் வீரர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் இந்த ஜபலுர் ருபாத்துக்கு உச்சியில் நிற்கவைத்தார்கள். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கட்டளை வரும்வரை இந்த குன்றிலிருந்து கீழே இறங்காமல் எதிரிகளை நோக்கி அம்பெய்தி கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். மதினாவிற்க்கு மிக அருகில் உள்ள உஹதில் 700 நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பார்களுடன் மிகக் கடுமையாக போரிட்டது இந்த பள்ளத்தாக்கில்தான் (படம் 15a).
Jabalur Rubath
ஜபலுர் ருபாத்
The valley of Uhd
படம் 15a
முஸ்லீம்களை எதிர்த்து போரிட எதிரிகளால் முடியவில்லை. தங்கள் தலைவர்களும் கொடியை தாங்க கூடியவர்களும் கொல்லப்பட்டதால் நிராகரிப்போர் போரிலிருந்து பின்வாங்கி சென்றனர். இதைக் கண்டதும் வில்போர் வீரர்களில் பத்து நபர்களை தவிர அனைவரும் பெருமானாரின் கட்டளையை புறக்கணித்து குன்றிலிருந்து இறங்கி எதிரிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் பொருள்களையும் சேகரிக்க தொடங்கினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காபிர்களின் குதிரைப்படையினர் குன்றின் பின்பக்கமாக மலைமீது ஏறி முஸ்லீம்களுக்கு எதிராக போரிட தொடங்கினார்கள். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் ஆங்காங்கு சிதறி ஓடினார்கள். ஒரு சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். இந்த சூழ்நிலையில் சிக்கி ஏராளமான முஸ்லீம் படையினர் வீரத்தியாகியாயினர்.

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான் அல்குர்ஆன் 3:152

முஸ்லீம்கள் மீண்டும் வலிமைபெற்று மிக்க வீரத்துடன் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்கியதால் அவர்கள் போர்களத்தை விட்டு ஓடிச்சென்றனர். உஹது போரில் தியாகிகளான சுமார் 60 ஷஹபாக்களின் கப்ருகள் இந்த சுற்று சுவருக்குள்தான் உள்ளன. அதற்க்கு நடுவில் உள்ளது பெருமானாரின் தந்தையின் சகோதரர் ஹம்ஸா பின் அப்துல்முத்தலிபின் கப்ரு ஆகும்.



கந்தக் - அகழ்ப்போர்
சமாதான சூழ்நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. குரைசிகளும் மேலும் ஆறு கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் பத்தாயிரம் படையினரும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட ஒட்டகங்களும் ஏரளமான ஆயுதங்களும் குதிரைபடையினரும் ஆரவாரத்துடனுன் கூட்டுப்படையாக மதினாவை தாக்க புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது தோழர்களுடன் போர் தந்திரங்களை பற்றி ஆலோசனை செய்தனர். மதினாவை சுற்றிலும் ஓர் அகழியை தோண்டி எதிரிகளின் முன்னேற்றத்தை தடை செய்வது என்ற பாரசீக போர் தந்திரத்தை ஸல்மான் பாரிஸ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் வைத்தார்கள். பெருமானார் அதை வரவேற்று ஒரு வாரம் கடினமாக உழைத்து ஒன்பதாயிரம் அடி நீளமும் குதிரைப் படையினரால் எளிதில் தாண்டமுடியாத அளவுக்கு அகலமும் ஆழமும் கொண்ட ஓரு அகழியை தோண்டினார்கள். பட்டினியால் நிமிர்ந்து நிற்க முடியாமல் தமது வயிற்றில் கற்களை கட்டிவைத்துக் கொண்டு பெருமானாரும் தோழர்களும் அந்த அகழியை தோண்டினார்கள். இந்த சாலை இருக்குமிடம் அந்த அகழியை சேர்ந்தது தான்.
அகழிக்கு மறுபுறம் வந்த கூட்டுப் படையினர் அந்த அகழியைப் பார்த்து வியந்து நின்றனர். அகழிக்கு மறுபுறம் ஸல்வு மலை உச்சியிலும் உள்ள முஸ்லிகளிடம் மட்டும் போர் சில நாட்கள் நடந்தது. முஸ்லீம்களிடம் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்ததையும் மீறி யூதர்கள் எதிரிகளிடம் சேர்ந்து கொண்டனர். மஸ்ஜித் பத்ஹ் என்ற இந்த இடத்தில்தான் பெருமானாரின் முகாம் இருந்தது.

இந்த நிலைமை ஒரு சில நாட்கள் நீடித்தது. ஒரு இரவில் பெரும் இரைச்சலுடன் காற்று வீசியது. பலத்த மழை பொழிந்தது. இடியும் மின்னலும் தொடர்ந்தது. அந்த சூறாவளி காற்றில் முகாம்கள் பறந்து சென்றன. முஸ்லீம்கள் அகழியை தாண்டி தாக்க வருவதாக தவறாக எண்ணிய கூட்டுப் படையினர் பொழுதும் விடியும் முன்னரே கந்தக்கை விட்டுச் சென்றனர். அல்லாஹ்வின் இந்த தந்திரம் முஸ்லீம்களை காப்பாற்றியது. தங்களை காப்பாற்றிய அல்லாஹ்விற்க்கு முஸ்லீம்கள் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள்.








No comments:

Post a Comment